
இவர் 1767ல் திருவாரூரில் ராமபிர்மம் என்பவர்களுக்கு குழந்தையாக பிறந்தார். அவ்வூர் இறைவன் பெயரையே தியாகராஜர் என குழந்தைக்கு வைத்தனர் பெற்றோர். இவர் ராமபிரானையே தன் பாடல்களில் அமைத்து இயற்றினார். தினமும் தனியாகவோ, சீடர்களுடனோ வீதிவீதியாக செல்லும் இவர், 'உஞ்ச விருத்தி' என்ற முறையில் ராம நாம பாடல்களை பாடி அதில் கிடைக்கும் உணவுப்பொருள்களை சமைத்து ராமருக்கு நைவேத்தியம் செய்து பின் தான் உண்பார். சதா சர்வ காலமும் ராம சிந்தனையில் வாழ்ந்த இவர் தன் வாழ்நாளில் 96 கோடி முறை ராம நாம மந்திரத்தை உச்சரித்த மகா புருஷர். இவரது 38வது வயதில் ராமர் இவருக்கு தரிசனம் தந்தார்.
No comments:
Post a Comment