Sunday, January 11, 2009

Tamil Daily Calender 2009

Very interesting to see the calender online...
http://tamilcalender.hosuronline.com/

"Bahavath Geethai"

Do you want to listen Bhagavath Geethai...

Bhagavad-gita chanting has wonderful atmosphere. Even low quality mp3(pro) files don't decrease the potency of ancient mantras of the Lord. Try to listen at least to one of them, follow the translation and maybe you will be inspired to chant daily...

Please follow this link......
http://www.vaisnava.cz/clanek_en.php3?no=24

நமக்கு வேண்டிய நான்கு

எல்லா தெய்வ வழிபாடும் ஒன்று தான். அறம், பொருள், இன்பம் இம் மூன்றிலும் தெய்வஒளியைக் காண்பவன் நான்காம் நிலையாகிய வீடுபேறு(முக்தி) அடைய தகுதியுடையவன் ஆவான்.
1. சுயநலத்தை மறந்து விடு.
2. தெய்வத்தை முழுமையாக நம்பு.
3. உண்மையையே எப்போதும் பேசு.
4. நியாயத்திற்கு கட்டுப்பட்டு உன் செயல்களைச் செய்.
அப்படி செய்தால் எல்லா இன்பங்களையும் நீ பெற்று மகிழ்வாய்.
அறிவே தெய்வம். அறிவு இருக்கும் இடத்தில் ஆண்டவனின் அருளாட்சி நடக்கிறது. அந்த அறிவாகிய கடலில் நாம் ஒவ்வொருவருமே ஒரு திவலை போல இருக்கிறோம். நமக்கு இந்த உலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயின்மை, அறிவு, செல்வம். இந்நான்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையானவையாகும். இவற்றை அருளும்படி தெய்வத்திடம் மன்றாடிக் கேட்க வேண்டும்.பொய் சொல்லக்கூடாது. புறம் சொல்லித் திரியக் கூடாது. முகஸ்துதியாக புகழுரை கூடாது. தன்னைத் தானே புகழ்ந்து பேசக்கூடாது. இந்நான்கையும் தவிர்த்து உள்ளதை உள்ளவாறு மட்டுமே பேச வேண்டும்.சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்து சித்தம் சக்தி மயமானால் அதன் பின் எல்லாம் இன்பமயமாகிவிடும்.
- பாரதியார்

மனதின் வெளிப்பாடே உலகம் - விவேகானந்தர்


  • கடவுள் வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவை அளக்க முடியாது. ஆனால், வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது. மனிதன் வட்டத்தின் மையம் போன்றவன். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு இதுதான்.
  • துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.
  • அறியாமை மிக்க வாழ்க்கையானது உயிரற்ற ஜட வாழ்க்கையைப் போன்றது. அறியாமையில் உழல்வதைவிட மரணமே மேலானது.
  • தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, ஒரு முயற்சியை மேற்கொண்டு அதனால் மாள்வதே மேல்.
  • இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும் ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம் செய்வது போல, நாம் எண்ணும் எண்ணங்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.
  • உலகை அழகு பொருந்தியதாக்குவதும், அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே. இந்த உலகம் முழுவதும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. இந்த உண்மையை புரிந்து கொண்டாலே, சரியான வாழ்க்கை வாழ முடியும்.

மனப்புயலை அடக்கிவிடு

  • தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.
  • சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.
  • எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.
  • ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.
  • வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.
  • சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா துவங்கியது

தஞ்சாவூர்: திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகள் 162வது ஆராதனை விழா துவங்கியது. துவக்க விழாவில் ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபா செயலர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார். தலைவர் ரெங்கசாமி மூப்பனார் தலைமை வகித்து பேசுகையில், ""30 ஆண்டுகளாக இந்த சபாவின் செயலராக இருந்த குன்னக்குடி வைத்தியநாதன் நம்மிடம் இல்லாதது பெரிய இழப்பாகும். சபாவின் திருமண மண்டபம், பல கட்டடங்கள் அவரால் கட்டப்பட்டது. அவர் மறைவு சங்கீத உலகுக்கும், சபாவுக்கு பெரிய இழப்பாகும்,'' என்றார். வயலின் வித்வான் சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: நான் சிறு வயதில் 1951லும், 1964 முதலும் இங்கு நடக்கும் விழாவுக்கு வந்து செல்வதை பாக்கியமாக கருதுகிறேன்.