Sunday, January 11, 2009

மனதின் வெளிப்பாடே உலகம் - விவேகானந்தர்


  • கடவுள் வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவை அளக்க முடியாது. ஆனால், வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது. மனிதன் வட்டத்தின் மையம் போன்றவன். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு இதுதான்.
  • துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.
  • அறியாமை மிக்க வாழ்க்கையானது உயிரற்ற ஜட வாழ்க்கையைப் போன்றது. அறியாமையில் உழல்வதைவிட மரணமே மேலானது.
  • தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, ஒரு முயற்சியை மேற்கொண்டு அதனால் மாள்வதே மேல்.
  • இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும் ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம் செய்வது போல, நாம் எண்ணும் எண்ணங்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.
  • உலகை அழகு பொருந்தியதாக்குவதும், அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே. இந்த உலகம் முழுவதும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. இந்த உண்மையை புரிந்து கொண்டாலே, சரியான வாழ்க்கை வாழ முடியும்.

3 comments: