Wednesday, January 14, 2009

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்


கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது என்பார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் காரணம் உண்டு. அக்காலத்தில் இடி,மின்னல் ஏற்பட்டால் அதை தாங்குவதற்கு எந்த வித வசதியும் இல்லை. கோயில்களில் வைக்கப்படும் கொடிமரத்தை தேக்கு மரத்தால் செய்து அதன் மேல் தாமிர தகடு வைத்து மூடியிருப்பார்கள். இதில் இடியோ மின்னலோ பட்டால் அது அப்படியே பூமிக்குள் ஈர்க்கப்பட்டு விடும். அத்துடன் கொடிமரத்தின் கீழ் நேர்த்திக்கடனுக்காக உப்பு கொட்டுவார்கள். இதனால் அந்த கொடிமரத்தின் ஈர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடி,மின்னலினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் கோயிலோ,கொடிமரமோ இல்லாவிட்டால் இதன் பாதிப்பு அப்படியே மக்களைப்பாதிக்கும்.மேலும் கொடிமரத்திற்கு பூஜை செய்யச்செய்ய அதன் எதிரே கற்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு சென்று மூலவரின் சக்தியை அதிகரிக்கச் செய்து, பின் கொடிமரத்தின் கீழ் வணங்கும் மக்களுக்கு அதன் பலன் சென்றடைகிறது.

கோயில்களில் கட்டப்படும் ராஜகோபுரங்களில் எல்லாம் நடுவில் வாசல் போன்று காற்று செல்ல வழி ஏற்படுத்திஇருப்பார்கள். ஏனென்றால் வேகமாக வீசும் காற்றால் கோபுரம் சாய்ந்து விடாமல், அந்த பாதை வழியே காற்று வெளியேறிவிடும். இதனால் கோபுரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
-எம்.கண்ணன்,மதுரை

No comments:

Post a Comment